மாகாண சபைத் தேர்தல்கள் சுமார் ஒரு வருடம் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள  தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க, ​​“மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும்,   இது தொடர்பாக இதுவரை எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பல அரசியல் கட்சிகள் இப்போது மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருவது புரிந்துகொள்ளத்தக்கது.

சில கட்சிகள் ஏற்கனவே தங்கள் முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பல மாகாண சபைகளின் பதவிக்காலம் காலாவதியாகிவிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.