Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சாகோஸ் ஒப்பந்தம்: இந்தியாவுக்கு தெற்கேயுள்ள பிரிட்டிஷ் – அமெரிக்க ரகசிய ராணுவ தளம் என்ன ஆகும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டியாகோ கார்சியாஎழுதியவர், ஜேம்ஸ் சாட்டர்பதவி, பிபிசி செய்திகள்34 நிமிடங்களுக்கு முன்னர்
சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் 3.4 பில்லியன் டாலர் ( 4.6 பில்லியன் டாலர் )ஒப்பந்தத்தில் பிரிட்டன் கையெழுத்திட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த தீவுகளில் மிகப்பெரியதான, பிரிட்டன்-அமெரிக்க ராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவின் கட்டுப்பாட்டை பிரிட்டன் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
டியாகோ கார்சியாவை குத்தகைக்கு எடுக்கும் 99 ஆண்டுகால ஒப்பந்தத்தால், பிரிட்டனுக்கு ஆண்டுக்கு 101 யூரோ மில்லியன் செலவாகும் என பிரதமர் சர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இந்த ராணுவத் தளத்தை “தீய செல்வாக்கிலிருந்து” பாதுகாப்பதற்கு இது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் “காலனித்துவத்தை இந்த ஒப்பந்தம் முழுமையாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளது” என மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் குறிப்பிட்டார்.
ஆனால் பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவர்களும், தற்போது பிரிட்டனில் வசிக்கும் சாகோஸ் தீவைச் சேர்ந்த சிலரும் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
சாகோஸ் தீவுகள் எங்கே உள்ளன?
படக்குறிப்பு, சாகோஸ் தீவுக்கூட்டம் என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவுகள் , சுமார் 60 தனித்தனி தீவுகளைக் கொண்ட ஏழு பவளத் தீவுகளைக் கொண்டவை.இந்தியாவுக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுகள் , அதிகாரப்பூர்வமாக ‘பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசம்’ என அழைக்கப்படுகின்றன.
இவை இந்தியப் பெருங்கடலில், பிரிட்டனில் இருந்து தென்கிழக்கில் சுமார் 5,799 மைல்கள் (9,332 கிமீ) தொலைவிலும், மொரிஷியஸிலிருந்து சுமார் 1,250 மைல்கள் வடகிழக்கிலும் அமைந்துள்ளது.
சாகோஸ் தீவுக்கூட்டம் என்றும் சுமார் 60 தனித்தனி தீவுகளைக் கொண்டது.
1965 ஆம் ஆண்டு மொரிஷியஸ் பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது மொரிஷியஸிலிருந்து இவை பிரிக்கப்பட்டன.
பிரிட்டன் இந்தத் தீவுகளை 3 மில்லியன் யூரோவுக்கு வாங்கியது. ஆனால் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவற்றை சட்டவிரோதமாக ஒப்படைக்குமாறு தாங்கள் நிர்பந்திக்கப்பட்டதாக மொரிஷியஸ் வாதிட்டது.
1960களின் பிற்பகுதியில், சாகோஸ் தீவுகளில் மிகப்பெரியதான ‘டியாகோ கார்சியா’வில் ஒரு ராணுவத் தளத்தை அமைக்க அமெரிக்காவை பிரிட்டன் அழைத்தது. இதற்காக, ஆயிரக்கணக்கான மக்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
அந்த தீவைச் சேர்ந்த மக்களில் சிலர், மொரிஷியஸ் மற்றும் சீஷெல்ஸில் குடியேறினர். மற்றவர்கள் பெரும்பாலும் பிரிட்டனில் மேற்கு சசெக்ஸில் உள்ள கிராலி பகுதியில் குடியேறினர்.
பட மூலாதாரம், PA Media
படக்குறிப்பு, சாகோசைச் சேர்ந்த மக்கள் சிலர், ஒப்பந்தத்தை நிறுத்த கோரி இறுதி கட்டத்தில் சட்ட சவால் செய்தனர். அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மொரிஷியஸுடன் பிரிட்டன் செய்துள்ள ஒப்பந்தம் என்ன?
பிரிட்டன், சாகோஸ் தீவுக்கூட்டத்தை மொரிஷியஸிடம் ஒப்படைத்தாலும், டியாகோ கார்சியாவை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
முதல் மூன்று ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டன் 165 மில்லியன் யூரோ செலுத்தும். அதற்குப் பிறகு, நான்காவது ஆண்டு முதல் 13வது ஆண்டுவரை ஆண்டுக்கு 120 மில்லியன் யூரோ செலுத்தும். 13வது ஆண்டுக்குப் பிறகு, இந்த தொகை பணவீக்கத்தின் அடிப்படையில் மாற்றப்படும்.
டியாகோ கார்சியாவை ராணுவத் தளமாக தொடர்ந்து பயன்படுத்தும் திட்டத்திற்கு, ‘Five Eyes Alliance’-இன் (‘ஐந்து கண்கள் கூட்டணியின்) உறுப்பினர்களான பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் சர் கெயர் ஸ்டார்மர் தெரிவித்தார். இந்த ராணுவத்தளத்தை “செயல்பாட்டில் வைப்பதற்கான செலவை” அமெரிக்கா ஏற்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் சாகோஸ் தீவு மக்களுக்கான 40 மில்லியன் யூரோ அறக்கட்டளை நிதியும் அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், டியாகோ கார்சியாவை மொரிஷியஸ் நாட்டின் கீழ் வரும் என்றாலும், தீவில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, டியாகோ கார்சியாவில் பிறந்த இரு சாகோசியப் பெண்களில் பெர்னாடெட் டுகாஸ்ஸூம் ஒருவர்.
“நான் பிரிட்டன் , மொரிஷியஸ், சீஷெல்ஸைச் சேர்ந்தவள் அல்ல. நான் டியாகோ கார்சியாவைச் சேர்ந்தவள்” என்று பிபிசியிடம் கூறினார் பெர்னாடெட்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவு அந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாகத் தடுத்தது. ஆனால், பின்னர் உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
பட மூலாதாரம், PA Media
படக்குறிப்பு, டியாகோ கார்சியாவில் பிறந்த பெர்னாடெட் டுகாஸ் (வலது) மற்றும் பெர்டிஸ் பாம்பே ஆகியோர் பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.டியாகோ கார்சியா ராணுவத் தளம் என்பது என்ன?
சாகோஸ் தீவுகளில் மிகப்பெரியது டியாகோ கார்சியா.
1970களின் தொடக்கத்தில் இருந்து, பிரிட்டனும் அமெரிக்காவும் கூட்டாக அங்கு ஒரு ரகசிய ராணுவத் தளத்தை செயல்பாட்டில் வைத்துள்ளன.
அதன் கட்டமைப்பு வசதிகளில் ஒரு விமானநிலையம் மற்றும் ஆழ்கடல் துறைமுகம், மேம்பட்ட தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு திறன்கள் ஆகியவை அடங்கும் என்று அரசாங்கம் கூறுகிறது.
இந்தத் தீவுக்கு எந்தவொரு வணிக விமான சேவையும் இல்லை. ராணுவத் தளத்தின் மூலம் அல்லது முந்தைய காலத்தில் அந்த பிரதேசத்தை நிர்வகித்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் மூலமாக மட்டுமே அங்கு செல்வதற்கு பொதுவாக அனுமதி கிடைக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் டியாகோ கார்சியா அமைந்துள்ளதால், புவிசார் அரசியல் மற்றும் ராணுவ உத்தி ரீதியாக அது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” போது, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் பணிகளை தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த தீவிலிருந்து நேரடியாக போர் விமானங்கள் அனுப்பப்பட்டன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிரிட்டனில் எத்தகைய எதிர்வினை இருந்தது?
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளனர். கட்சித் தலைவர் கெமி படேனோக் இந்த ஒப்பந்தத்தை “தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“சீனாவால் நமக்கு பாதிப்பு ஏற்பட வழி வகுக்கிறது. சாகோஸ் தீவு மக்களின் விருப்பத்தை புறக்கணிக்கிறது. அதற்காக நாங்கள் பில்லியன்கணக்கில் பணம் செலுத்துகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
சீர்திருத்தக் கட்சி தலைவர் நைஜல் ஃபராஜ், இந்த ஒப்பந்தம் “தேவையில்லை” என்றும், “இது சீனாவுக்கு சாதகமாக அமைகிறது” என்றும் விமர்சித்தார்.
ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் டியாகோ கார்சியாவில் உள்ள ராணுவத் தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவது உறுதியற்றதாக இருந்திருக்கும் என்று அரசாங்கம் கூறியது .
“இந்த ஒப்பந்தம் இல்லையெனில், இன்னும் சில ஆண்டுகளில் அந்த ராணுவத் தளம் செயல்படாமல் போகும் அபாயமும் இருந்திருக்கும்.”என்று பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். “டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க-பிரிட்டன் கூட்டு ராணுவ வசதியின் நீண்டகால, நிலையான மற்றும் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா “வரவேற்கிறது”, இது பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது” என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, 1970களில் இருந்து பிரிட்டன் -அமெரிக்க கூட்டு ராணுவத் தளத்தின் தாயகமாக டியாகோ கார்சியா இருந்து வருகிறது.மொரிஷியஸில் இதற்கு எத்தகைய எதிர்வினை காணப்பட்டது?
இந்த ஒப்பந்தம் “மொரீஷியஸ் நாட்டிற்கு ஒரு பெரிய வெற்றி” என்று மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் கூறினார்.
இது தொடர்பாக, மொரிஷியஸ் அட்டர்னி ஜெனரல் கேவின் குளோவர் பிபிசியிடம் பேசினார்.
“இந்த 60 ஆண்டுகால போராட்டம் இறுதியாக முடிவுக்கு வந்ததில் எங்கள் நாடு மகிழ்ச்சியடைகிறது, குறிப்பாக வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த நமது சகோதர சகோதரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.
இந்த ஒப்பந்தம் குறித்து சாகோஸ் தீவைச் சேர்ந்த மக்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும், மொரிஷியஸில் உள்ள சாகோஸ் அகதிகள் குழு தலைமையகத்தில் ஒரு வயதான பெண்மணி இந்த முடிவைக் கொண்டாடினார்.
“இப்போது நான் இறுதியாக அங்கு செல்ல முடியும்…நிம்மதியாக இறக்க முடியும்” என்கிறார் அப்பெண்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு