புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த பல்கலைக்கழக மாணவி  மீது தாக்குதல் மேற்கொண்ட  கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவன்  கடந்த வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்   காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின்   விவசாய பீடத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே,  புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்வது தொடர்பாக இடம்பெற்ற  கலந்துரையாடலின் போது  மாணவி ஒருவர்,  பகிடிவதை செய்ய வேண்டாம்  என தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில்  குறித்த  மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவன் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்தே   மாணவியை தாக்கிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவனை நீதிமன்றில்  முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  காவல்துறையினா்  இது தொடர்பான மேலதிக விசாரணையை   மேற்கொண்டு வருகின்றனர்