காணொளிக் குறிப்பு, எடப்பாடி பழனிசாமி’நிதி ஆயோக் கூட்டத்தை 3 ஆண்டுகள் புறக்கணித்த ஸ்டாலின் இப்போது சென்றது இதற்காகதான்’ – எடப்பாடி பழனிசாமி

51 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

இந்தநிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”மூன்றாண்டு காலம் புறக்கணித்த பிறகு நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

ஆனால், ”இப்போது பல்வேறு துறையில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடந்துவருகிறது. அதற்கு பயந்துதான் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார் என கருத வேண்டியுள்ளது” எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு