Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பூநகரி முழங்காவிலில் நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோத காணி கட்டுமானங்களை தடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்களிற்கு தலைமை தாங்கிய நபர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பூநகரி பிரதேசசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் படுதோல்வியடைந்த இந்நபர் சபேசன் என பெயருடையவரெனவும் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் அனுமதியற்ற கல் அரிவு ஆலையென நாச்சிக்குடாவில் கொடி கட்டி பறப்பவரெனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் படுதோல்வியடைந்த போதிலும் பின்கதவு வழியாக அந்நபர் நியமிக்கப்பட்டுள்ளமை ஆதரவாளர்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.பிரதமர் ஹரிணி பங்கெடுத்த பிரச்சாரக்கூட்டங்களை ஒருங்கமைத்ததுடன் தனது அனுமதியற்ற கல் அரிவு ஆலையில் மேடை அமைத்துக்கொடுத்ததாகவும் அதன் மூலம் தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் மனதில் இடம்பிடித்துக்கொண்டதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் ஆளும் தரப்பின் ஆசீர்வாதத்துடன் அரச காணிகளை பிடித்துக்கொள்ள முன்னெடுக்கப்பட்ட சதி திட்டமே பிரதேசசபை அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே அவர்கள் மீது தாக்குதல் நடாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முழங்காவில் நாச்சிக்குடா முதல் கரியாலைநாகபடுவான் வரையென அரச காணிகளை 55துண்டுகளாக்கி தனது ஆதரவாளர்களிற்கு கடைகள் அமைக்க பகிர்ந்து வழங்கும் திட்டம் வகுப்பட்டிருந்தது.எனினும் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டபின்னராக அதனை சந்திரசேகரன் -இளங்குமரன் அணி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.அத்திட்டத்தை முன்னெடுக்கும் முகவராக பிரதேசசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பின்கதவு உறுப்பினர் சபேசன் நியமிக்க்பபட்டுள்ளார்.
ஒரு துண்டு நிலம் பத்து இலட்சமென்ற அடிப்படையில் முற்பணமாக ஒரு இலட்சம் பதினொரு பேரிடம் பெறப்பட்டுள்ளது.
தற்காலிகமானதும் பிரதேசசபையால் அகற்றப்படமுடியாததுமான தகர கொட்டகைகள் அருகிலுள்ள கிராமமான குமுழமுனையில் தயாரிக்கப்பட்டு இரவோடிரவாக காணிகள் நிறுவப்படும்.பின்னர் அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் பத்துவருடங்களிற்கு மேலாக ஈடுபடுவதாக காரணங்காட்டி காணிகளிற்கான உரிமைகளை வழங்குவதே திட்டமாகும்.
இத்திட்டத்தை வகுத்துக்கொடுத்தவர்களாக பூநகரி பிரதேசசெயலாக குடியேற்ற உத்தியோகத்தர் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் இருந்துவருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மையிலேயே கரவெட்டி பிரதேசசெயலகத்திலிருந்து இடமாற்றத்தில் குடியேற்ற உத்தியோகத்தர் அங்கு சென்றிருந்ததாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விரு அதிகாரிகளும் கடந்த இருவாரங்களாக முழங்காவிலில் தங்கியிருந்து செயற்பட்டுள்ளனர்.பூநகரி பிரதேசசெயலர் அகிலன் மாகாணசபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் புதிய செயலாளராக ஆயகுலன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவரது தந்தையாரின் மரணத்தினால் பதவியேற்பதிலுள்ள இடைவெளியையும் பயன்படுத்தி கல்லா கட்ட முற்பட்டமையும் அதனுள் விடயம் தெரியாமல் பிரதேசசபை தலையிட்டமையுமே குழப்பதினுள் முடிந்துள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 2ம் திகதி முதல் தமிழரசுக்கட்சி சார்பு பிரதேச சபை ஆட்சியமைக்க பெரும்பான்மையினை பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக கடைகளினை பகிர எதிர்வரும் செவ்வாய் கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சரது இரகசிய கூட்டமும் வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் அழைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முழங்காவிலில் கடந்த கால அரசியல் சூழல்களால் பல பெரும் வர்த்தகர்கள் ஜந்து முதல் பத்து கடைகள் உரிமையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் அனுமதியற்ற கட்டடங்களிற்கு வழக்கு மற்றும் கடைகளை சுவீகரிப்பதென பிரதேசசபை மறுபுறம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக கூறப்படும் நிலையில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக பிரதேசசபை சட்டவிரோத கட்டுமானங்களை கண்காணிப்பதை முழங்காவிலில் கைவிடலாமென்ற பேசப்படுகின்ற போதும் அதனை பிரதேசசபை செயலாளர் மறுதலித்துள்ளார்.