வடகிழக்கு எங்கும் புத்தர் மீண்டும் ஆமோகமாக பயணத்தை ஆரம்பித்துள்ளார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளது.

உகந்தைமலையில்  முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதே சூழலில் இந்த புத்தர் சிலை எவ்வாறு வைக்கப்பட்டது? கதிர்காமம் போல் உகந்தை மலையையும் மாற்றுவதற்கு திட்டமிட்ட சதி நடக்கிறதா? என்று இந்து மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் ஒன்றான உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் குன்றில் முளைத்துள்ள சிலை பௌத்த ஆக்கிரமிப்பின் மற்றொரு அங்கம் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.