வீட்டுத் தோட்டத்தில் மோதி நின்ற கப்பல் – காலையில் கண்விழித்தவருக்கு அதிர்ச்சி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தரைதட்டி நின்ற கப்பல் எழுதியவர், ஃபிரான்ஸெகா ஜில்லெட்பதவி, பிபிசி 49 நிமிடங்களுக்கு முன்னர்

நார்வேயில் உள்ள நபர் ஒருவர் காலையில் தூங்கி எழும் போது, அவரது வீட்டின் முன்னாள் உள்ள தோட்டத்தில் கண்டெய்னர் கப்பல் ஒன்று கரையை உடைத்துக் கொண்டு வந்து நின்றது.

ஜோஹன் ஹெல்பெர்க் என்ற அந்த நபரின் வீடு அந்த கப்பலால் இடிக்கப்படுவதிலிருந்து சில மீட்டர் தூர வித்தியாசத்தில் தப்பியிருந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டிரோந்தெய்ம் என்ற இடத்தில் அந்த பிரமாண்ட கப்பல் கரையை நோக்கி நேராக வருவதைப் பார்த்த ஹெல்பெர்க்கின் அண்டை வீட்டுக்காரர் அவரை உஷார்ப்படுத்தினார்.

“நான் கதவைத் திறக்க விருப்பப்படாத நேரத்தில் வீட்டின் மணி அடிக்கப்பட்டது” என டிவி2 தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் ஹெல்பெர்க் கூறுகிறார்.

“நான் ஜன்னலருகே சென்ற போது, அவ்வளவு பெரிய கப்பலைப் பார்த்து ஆச்சர்யமடைந்தேன்” என கார்டியன் செய்திக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“கப்பலின் உச்சியைப் பார்க்க எனது கழுத்தை வளைக்க வேண்டியிருந்தது. அது நம்ப முடியாதது” என ஹெல்பெர்க் கூறுகிறார்.

“தெற்குப் புறமாக 5 மீட்டர் தள்ளி வந்திருந்தால், என்னுடைய படுக்கையறைக்குள் நுழைந்திருக்கும், ஆனால் எனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை” எனவும் அவர் நார்வேயன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சில மீட்டர் இடைவெளி வித்தியாசத்தில் தப்பிய வீடு கரையை நோக்கி முழுவேகத்தில் வந்து கொண்டிருந்த கப்பலின் ஓசை கேட்டு தான் விழித்து எழுந்ததாகவும், உடனடியாக ஹெல்பெர்க்கின் வீட்டை நோக்கி ஓடியதாகவும் பக்கத்து வீட்டில் வசிப்பவரான ஜோஸ்டீன் ஜோர்கென்சன் கூறுகிறார்.

“முதலில் அவர் வெளியே இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் வீட்டில் யாரோ இருப்பது போல தோன்றியது. பலமுறை அழைப்பு மணியை அடித்தேன் ஆனால் எந்த சத்தமும் இல்லை” என்றார் ஜோர்கென்சன்

“கடைசியாக போனில் மட்டுமே அவரை தொடர்பு கொள்ள முடிந்தது” என டிவி2க்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சைப்ரஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட என்எல்சி சால்டன் என்ற அந்த சரக்கு கப்பல், தென்மேற்கு திசையில் டிரோந்தெய்ம் ஃப்ஜோர்டிலிருந்து ஆக்ரேஞ்சர் நகரை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது தரை தட்டியுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கப்பல் தரை தட்டியதற்கான காரணத்தை விசாரித்து வருவதாக நார்வே போலீஸார் கூறியுள்ளனர்.

“இது மிகப்பெரிய அண்டை வீட்டார் போலுள்ளது. ஆனால் இது (கப்பல்) விரைவில் சென்று விடும் ” எனவும் ஹெல்பெர்க் நகைச்சுவையாக கூறுகிறார்.

பட மூலாதாரம், EPA

இந்த கப்பலை இயக்கும் என்சிஎல் நிறுவனத்தின் தலைவர் பென்ட் ஹெட்லேண்ட்,”இது மிகவும் தீவிரமான நிகழ்வு” மேலும் “யாரும் காயமடையவில்லை என்பதை நினைத்து மகிழ்வடைகிறோம்” என்று கூறினார்.

“தற்போதைய நிலையில், இந்த விபத்துக்கு காரணம் என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. இது பற்றிய விசாரணைகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

தகவல்களின் அடிப்படையில் இந்த கப்பலானது ஏற்கெனவே 2023ம் ஆண்டில் தரை தட்டியுள்ளது. இருப்பினும் சுய திறனால் மீண்டு கடலுக்குச் சென்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

-இது , பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு