Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியா தாக்குதலுக்கு முன்பு தகவல் கொடுத்ததா? பாகிஸ்தான் ராணுவம் கூறுவது என்ன?காணொளிக் குறிப்பு, இந்தியா எச்சரிக்கை கொடுத்ததா? பாகிஸ்தான் கூறுவது என்ன?இந்தியா தாக்குதலுக்கு முன்பு தகவல் கொடுத்ததா? பாகிஸ்தான் ராணுவம் கூறுவது என்ன?
2 மணி நேரங்களுக்கு முன்னர்
”இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இந்த தாக்குதல்கள் குறித்து இந்தியா பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் தெரிவித்திருந்ததாகக் கூறுகிறார். அப்படி நடந்ததா?” என பிபிசி செய்தியாளர் ஃபர்ஹத் ஜாவேத் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஷரிஃப் சௌத்ரி உடனான நேர்காணலில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஷரிஃப் சௌத்ரி,” இந்தியா என்ன சொல்கிறது அல்லது என்ன சொல்லவில்லை என்பதை சார்ந்து எங்கள் உளவுத்துறை இல்லை. பாகிஸ்தான் வான் பாதுகாப்புப் படையால் தடுக்க முடியாது என்று அவர்கள் நினைத்த சிறிய ரேடார் டிரோன்களை கூட நாங்கள் கண்டறிந்து அது எங்கிருந்து வந்தது என்பதையும் கண்டறிந்துள்ளோம் என்பதை ஊடகங்களுக்கு காட்டியுள்ளோம். பாகிஸ்தானுக்கு எதிராக இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்ற இந்த அதிகப்படியான நம்பிக்கை இந்த மோதலில் பல மட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரியவேண்டும் என்பது இல்லை. உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை. நீங்கள் எப்படிப்பட்ட எதிராளி என்பது எங்களுக்குத் தெரியும். உங்களிடம் என்னென்ன திறன்கள் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். உங்கள் திறன்களை குறைத்து மதிப்பிடவில்லை. உங்கள் திறன்களை முழுமையாக மதிக்கிறோம். மேலும், உங்கள் மனநிலையையும் நாங்கள் அறிவோம்.” என்றார்.
மேலும், இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர், இது உண்மையில் சாத்தியமா அல்லது வெறும் தடுப்பு உத்தியா? சண்டை நிறுத்தம் குறித்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தை எங்கிருந்து தொடங்கியது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஷரிஃப் சௌத்ரி அளித்த பதில்களை இந்த காணொளியில் காணலாம்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு