Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஒரே இடத்தில் இறந்து புதைந்த ஆயிரக்கணக்கான டைனோசர்கள் – ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்பட வைத்த வரலாற்று நிகழ்வு
பட மூலாதாரம், Kevin Church / BBC
எழுதியவர், ரெபாக்கா மொரெல்லே & ஆலிசன் ஃப்ரான்சிஸ் பதவி, 42 நிமிடங்களுக்கு முன்னர்
கனடாவின் அல்பெர்டாவில் அமைந்துள்ள ஒரு பசுமையான காட்டின் சரிவில் அதிகளவில் டைனோசர்கள் புதைந்து போன இடம் ஒன்று இருக்கிறது.
ஒரு நாள் நடந்த மோசமான நிகழ்வில், ஆயிரக்கணக்கான டைனோசர்கள் கொல்லப்பட்டு அங்கே புதைந்து போயின.
தற்போது புதைப்படிவ பொருட்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ரிவர் ஆஃப் டெத், என்று அழைக்கப்படும் பைப்ஸ்டோன் க்ரீக்குக்கு ஆராய்ச்சி செய்ய வந்துள்ளனர்.
டைனோசர்கள் எவ்வாறு இறந்தன என்ற 7.2 கோடி ஆண்டுகால புதிருக்கு பதில் தேட அங்கே தற்போது முகாமிட்டுள்ளனர்.
கனமான சுத்தியலின் உதவியைக் கொண்டு, தொல்பொருட்கள் மீது படிந்திருக்கும் மண்ணைத் தட்டி ஆராய்ச்சி மேற்கொள்ளும் அவர்கள், இந்த டைனோசர்கள் எப்படி இறந்தன என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த ஆராய்ச்சியை வழிநடத்தும் பேராசிரியர் எமிலி பாம்ஃபோர்த் இந்த படிமப் பொருளை ‘தொன்மத் தங்கம்’ (Palaeo Gold) என்று அழைக்கிறார். ஆனால் இதில் இருக்கும் சவால் என்னவென்றால், இந்த டைனோசர்களின் படிமங்களை ஆய்வு செய்ய அதன் மீது இருக்கும் கடினமான பாறைகளை உடைக்க வேண்டும்.
அவருடைய குழு கொஞ்சம் கொஞ்சமாக அங்கே இருக்கும் மண்ணை, அடுக்கடுக்காக அப்புறப்படுத்த, அந்த டைனோசர்களின் எலும்புகள் மேலே தெரிய ஆரம்பித்தன.
பட மூலாதாரம், Kevin Church / BBC
படக்குறிப்பு, பைப்ஸ்டோன் சிற்றோடை அருகே கண்டுபிடிக்கப்பட்ட பேச்சிரினோசரின் இடுப்பெலும்புஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, இந்த ஆய்வில் எமிலியின் நாயான ஆஸ்டரும் இணைந்துள்ளது. ஆஸ்டர் எங்கேனும் எலும்பு இருப்பதை கண்டுபிடித்தால் உடனே குரைக்க வேண்டும். அதற்கு அது தான் வேலை. அந்த நாயைப் பார்த்துக் கொண்டு பிபிசியிடம் பேசிய பேராசிரியர் எமிலி, “அங்கே ஒரு பெரிய எலும்பு உள்ளது. இடுப்பு எலும்பின் ஒரு பகுதி என்று நாங்கள் நினைக்கின்றோம்,” என்று கூறினார்.
“இங்கே நீளமான, ஒல்லியான எலும்புகளையும் பார்க்கின்றோம். இவை மார்புக்கூட்டில் காணப்படும் எலும்புகள். இது கால் பாதத்தில் காணப்படும் எலும்பு. இந்த எலும்பு என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று ஒவ்வொரு எலும்பாக சுட்டிக்காட்டி அதுகுறித்து விளக்கம் அளிக்கும் எமிலி, “இது தான் பைப்ஸ்டோன் சிற்றோடையின் பின்னே மறைந்திருக்கும் மர்மம்,” என்று கூறுகிறார்.
கனடாவின் பைப்ஸ்டோனுக்கு சென்ற பிபிசி, அங்கே உள்ள வரலாற்றுக்கு முந்தைய புதைகாட்டின் அளவு மற்றும் அங்கே ஆராய்ச்சியாளர்கள் டைனோசரின் அழிவு குறித்து தெரிந்து கொண்ட ஒவ்வொரு தகவலையும் இணைக்கின்றனர் என்று நேரில் கண்டது.
ஆயிரக்கணக்கான புதைப்படிமங்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன. அது இந்த பெரியளவிலான டைனோசர்களின் இறப்பு குறித்து புதிய புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.
பட மூலாதாரம், Kevin Church/BBC News
படக்குறிப்பு, பேராசிரியர் எமிலியும் அவருடைய நாய் அஸ்டரும் 2 டன் எடை கொண்ட ராட்சத விலங்கு
இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புகள் அனைத்தும் பேச்சிரினோசரஸ் வகை டைனோசரை சார்ந்தது. பேராசிரியர் எமிலியின் அகழ்வாராய்ச்சி, பிபிசியின் ‘வாக்கிங் வித் டைனோசரஸ்’ என்ற தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையை காட்சிப்படுத்த அறிவியலையும், காட்சி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வகை டைனோசர்கள் கடைசி கிரிடேசியஸ் காலத்தில் வாழ்ந்துள்ளன. இவை ட்ரைசெராடாப்ஸ் (Triceratops) வகை டைனோசர் இனத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டவை. ஐந்து மீட்டர் நீளமும், 2 டன்கள் எடையும் கொண்ட இந்த தனித்துவமான போனி ஃப்ரில்கள் மற்றும் மூன்று கொம்புகளைக் கொண்ட நான்கு கால் மிருகமாகும். போனி ஃப்ரில்கள் என்பது தலைக்குப் பின்னால் கழுத்துப் பகுதியில் எலும்புகளோடு மயில் தோகை போன்று இருக்கும் உடல் பகுதியாகும்.
மற்றொரு தனித்துவமான ஒரு அம்சம் என்பது அதன் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கட்டி போன்ற அமைப்பாகும். இது ‘பாஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமாகின. தற்போது ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றிவரும் சிறிய அளவிலான நிலப்பரப்பில் புதைப்படிமங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. ஒவ்வொரு சதுர மீட்டரிலும் 300 எலும்புகள் உள்ளன என்று பேராசிரியர் எமிலி கணித்துள்ளார்.
ஒரு டென்னிஸ் மைதானம் அளவிலான பகுதி தற்போது வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த எலும்புகளின் படுகையானது கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு மலைப்பகுதியில் நீண்டுள்ளது.
மிகவும் ஆச்சர்யப்படுத்தும் முக்கிய அம்சம் இதில் என்னவென்றால், இந்த எலும்புகளின் அடர்த்தி என்று எமிலி கூறுகிறார்.
“வட அமெரிக்க பிராந்தியத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய எலும்புப்படுகை இது என்று நாங்கள் நினைக்கின்றோம். இதுவரை கண்டறியப்பட்ட டைனோசர்கள் வகைகளில் பாதிக்கும் மேலானவை, ஆங்காங்கே கிடைத்த ஒரே ஒரு டைனோசரின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரியைக் கொண்டு வகைப்படுத்தப்பட்டவை. ஆனால், இங்கே ஆயிரக்கணக்கான பேச்சிரினோசரஸ் இருக்கின்றன,” என்றும் விவரிக்கிறார் அவர்.
பட மூலாதாரம், Kevin Church/BBC News
படக்குறிப்பு, பைப்ஸ்டோன் ஓடையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் குளிர்காலத்தில் தென் அமெரிக்காவுக்கு வலசை சென்ற இந்த டைனோசர்கள், கோடை காலத்தை கழிப்பதற்காக, பிரமாண்ட அணியாக நூற்றுக்கணக்கான மைல்கள் வலசை மேற்கொண்டு வடக்கு நோக்கி வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
தற்போது இருப்பதைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக வெதுவெதுப்புடன் இருந்த இப்பகுதி பசுமைப் போர்த்தியதாக இருந்திருக்க வேண்டும். தாவர உண்ணிகளாக இந்த பெரிய டைனோசர்களுக்கு தேவையான உணவை வழங்கக்கூடிய அளவுக்கு அது பசுமையாக இருந்திருக்க வேண்டும்.
“இது ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்கின் ஒரே கூட்டம். இது மிகப்பெரிய மாதிரி அளவு. தொன்ம ஆராய்ச்சியில் இது போன்ற பதிவு இதற்கு முன்பு நடந்ததில்லை,” என்று பேராசிரியர் எமிலி பாம்ஃபோர்த் தெரிவிக்கிறார்.
பட மூலாதாரம், Walking with Dinosaurs/BBC Studios
படக்குறிப்பு, கணினி மூலம் உருவாக்கப்பட்ட பேச்சிரினோசரஸின் தோற்றம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஆச்சர்யங்களை வாரி வழங்கும் ஆராய்ச்சி
அல்பெர்டாவின் வடமேற்கில் அமைந்திருக்கும் இந்த பகுதி பேச்சிரினோசரஸ்களின் வீடு மட்டும் அல்ல. இவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவிலான டைனோசர்கள் இங்கே உலவிக் கொண்டிருந்தன. பேச்சிரினோசரஸ்களைப் பற்றி அறிந்து கொள்வது என்பது பழங்கால சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவும் முக்கிய அம்சமாகும்.
இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நாங்கள் டெட்ஃபால் மலைத்தொடரை அடைந்தோம். அங்கே செல்வது என்பது அடர்ந்த காட்டுக்குள் நடந்து, அலைந்து, ஆஸ்டர் இருந்தால் அதனையும் பாதுகாத்து, நதியைக் கடந்து, வழுக்கும் பாறைகளில் பாதுகாப்பாக நடப்பது என்று ஆயிரம் சவால்களை உள்ளடக்கியது.
இங்கே எதையும் தோண்ட வேண்டாம். கரையை ஒட்டியே பெரிய அளவிலான எலும்புகளைக் காண இயலும். பாறைகளால் இழுத்துவரப்பட்டு, ஆற்று நீரால் கழுவப்பட்ட இந்த எலும்புகள் நாம் கண்டுப்பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
அங்கே சென்றதும் ஒரு முதுகெலும்பின் (Vertebra) ஒரு கண்ணியைக் கண்டறிந்தோம். மார்புக் கூட்டின் சில பகுதிகளும், பற்களும் ஆங்காங்கே சேற்றில் சிதறிக் கிடந்தன.
பட மூலாதாரம், Kevin Church/BBC News
படக்குறிப்பு, எட்மோண்டோசரஸ் உயிர்வாழ்ந்த பகுதியான டெட்ஃபால் மலைத்தொடரில் காணப்பட்ட டைனோசரின் பாத எலும்பு புதைப்படிம ஆராய்ச்சியாளர் ஜாக்சன் ஸ்வேடருக்கு ஆர்வத்தை அளிப்பது என்னவென்றால், பார்ப்தற்கு டைனோசரின் மண்டையோட்டைப் போல காட்சியளிக்கும் எலும்புகளின் குவியல்.
“எங்களுக்கு இங்கே கிடைத்த புதைப்படிமங்களில் பெரும்பாலானவை எட்மோண்டோசரஸ் (Edmontosaurus) வகையைச் சேர்ந்தது. தற்போது நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி வரும் பகுதியானது மண்டையோடு என்பது உறுதியானால், இந்த டைனோசரஸ் 10 மீட்டர் நீளம் கொண்ட தலையைக் கொண்டது என்று கூற இயலும்,” என்று தெரிவிக்கிறார் ஜாக்சன்.
எட்மோண்டோசரஸ் என்பது மற்றொரு தாவர உண்ணி. பேச்சிரினோசரஸைப் போன்றே காடுகளில் வலம் வந்த வகை. இந்த புதிய ஆய்வு முடிவுகள், பூமியின் தொன்மையான நிலம் எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதை கற்பனை செய்து பார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
கிராண்டே ப்ரேரீயில் செயல்பட்டு வரும் பிலிப் ஜே க்யூரி டைனோசர் அருங்காட்சியகத்தில் ஸ்வேடர் ‘கலக்ஷன்’ மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
அகழ்வாய்வு செய்யப்பட்டு பெறப்பட்ட இந்த இரண்டு டைனோசர்களின் மிகப்பெரிய எலும்புகளும் இங்கே தான் சுத்தம் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
தற்போது ஸ்வேடர், 1.5 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய பேச்சிரினோசரஸ் மண்டையோட்டை ஆய்வு செய்து வருகிறார். அந்த டைனோசருக்கு அவருக்கு, “பிக் சாம்” என்று பெயரிட்டுள்ளார் ஸ்வேடர்.
பட மூலாதாரம், Kevin Church/BBC News
படக்குறிப்பு, பண்டைய உலகம் குறித்து அறிந்துகொள்ள ஜாக்சன் ஸ்வேடர் அருங்காட்சியகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் ஃப்ரிலின் எந்த பகுதியில் மூன்று கொம்புகளும் இடம்பெறும் என்பதை சுட்டிக்காட்டிய அவர், அதில் ஒன்று காணவில்லை என்பதை தெரிவித்தார். “அனைத்து மண்டையோடுகளிலும் முழுமையான கொம்புகள் அந்த இடத்தில் இருந்தன. ஆனால், இந்த ஒற்றைக்கொம்பு மட்டும் அங்கே இல்லை,” என்றார் ஸ்வேடர்.
பல ஆண்டுகளாக களத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் அருங்காட்சியகக் குழு இதுவரை 8 ஆயிரம் டைனோசர் எலும்புகளை சேகரித்துள்ளது. அதன் ஆய்வகம் முழுவதும் புதைப்படிமங்களால் நிறைந்துள்ளது.
டைனோசரின் பல இனங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள், டைனோசரின் உயிரியல் குறித்து அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. மேலும் இந்த விலங்குகள் எப்படி வளருகின்றன, அவை எப்படி ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் அறிந்துகொள்ள உதவுகிறது.
ஒரு பெரிய கூட்டத்தில் விலங்குகள் தனித்து தெரிவதற்கு தேவையான வித்தியாசங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பிக் சாம் விவகாரத்தில் இல்லாமல் இருக்கும் ஒற்றைக் கொம்பை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
பட மூலாதாரம், Walking with Dinosaurs/BBC Studios
படக்குறிப்பு, இயற்கைப் பேரிடரின் காரணமாக இந்த விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் அழிவுக்குக் காரணம் என்ன?
அருங்காட்சியம் மற்றும் இரண்டு தளங்களில் நடத்தப்படும் இந்த ஆராய்ச்சிகள், முக்கியமான இந்த ஒரு கேள்விக்கான பதிலைப் பெற உதவுகின்றன: ஒரே நேரத்தில், பைப்ஸ்டோன் க்ரீகில், அளவுக்கு அதிகமான டைனோசர்கள் உயிரிழந்தது எப்படி?
“வலசை சென்ற பெரிய குழு ஒன்று மோசமான பேரிடரை சந்தித்து அதன் மூலம் இறந்திருக்கக் கூடும் என்று நாங்கள் நம்புகின்றோம். முழுமையான குழு இல்லையென்றால் அதில் பாதி அந்த பேரிடரில் இறந்திருக்கலாம்,” என்று பேராசிரியர் எமிலி கூறுகிறார்.
திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினாலோ, அல்லது மலையின் மேலே ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் விளைவாகவோ இது ஏற்பட்டிருக்கலாம். தடுத்து நிறுத்த இயலாத நீர்ப்பெருக்கு, அடித்துவரப்பட்ட மரங்கள், பாறைகள் இவை அனைத்தும் ஒன்றாக அந்த விலங்கினத்தின் மறைவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அப்படி நிகழ்ந்திருந்தால் பேச்சிரினோசரஸ் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறார் பேராசிரியர் எமிலி. “இவை அனைத்தும் முதலில் கூட்டமாக வலசை வந்திருக்கின்றன. மேலும், அவை அதிக எடை கொண்டவை. அந்த இனத்தினால் நன்றாக நீச்சல் அடிக்க முடியாது. இது போன்ற காரணங்களால் அவை வேகமாக நகர முடியாமல் இருந்திருக்கலாம்,” என்று கூறுகிறார் அவர்.
ஆய்வு நடக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாறைகளில், வேகமாக பாய்ந்து வரும் நீரில் சுழலும் வண்டல் மண் படிமங்களைக் காண இயலும். அழிவை அப்படியே உறைய வைத்தால் எப்படி இருக்குமோ அது போன்று கல்லில் அலை அலையாக அவை படிந்துள்ளன.
பட மூலாதாரம், Kevin Church/BBC News
படக்குறிப்பு, ஆய்வு செய்யப்படும் இடத்தில் இருந்து பெறப்பட்ட பாறையில் காணப்படும் அலையோட்டம் அந்த டைனோசர்களுக்கு மோசமாக இருந்த நாள் ஒன்று புதைபடிம ஆராய்ச்சியாளர்களின் கனவு ஆராய்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது.
“நாங்கள் இங்கே வரும்போதெல்லாம், இங்கே நாங்கள் எலும்புகளை கண்டுபிடிப்போம் என்று 100% உத்தரவாதத்தோடு வருவோம். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இந்த விலங்கினம் குறித்து புதிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்,” என்று எமிலி கூறுகிறார்.
“நாங்கள் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக தகவல்களை இங்கே கண்டறிகின்றோம் என்பதால் அடிக்கடி நாங்கள் இங்கே வருகிறோம்,” என்று கூறுகிறார் அவர்.
பட மூலாதாரம், Walking With Dinosaurs/BBC Studios
படக்குறிப்பு, கூட்டமாக வலசை சென்ற பேச்சிரினோசரஸின் குழு தங்களின் கருவிகளை எடுத்துக்கொண்டு மற்றொரு நாள் வரத் தயாராகும் போது, இன்னும் பார்ப்பதற்கு பல வேலைகள் இருக்கின்றன என்று அவர்களுக்குத் தெரியும்.
இங்கும் அங்கும் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இதுவரை மேற்பரப்பை மட்டுமே ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். ஆனால், வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் ரகசியத்தை வெளிப்படுத்த பல முக்கிய அம்சங்கள் அங்கே காத்திருக்கின்றன.
வாக்கிங் வித் டைனோசரஸ் (Walking With Dinosaurs) இந்த மாதம் 25-ஆம் தேதி அன்று ஞாயிறு பிபிசி ஒன் – இல் ஒளிபரப்பப்பட உள்ளது. பிபிசி ஐப்ளேயரில் அனைத்து எபிசோட்களையும் காண இயலும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு