யேர்மனியின் ஹாம்பர்க் நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாகவும், நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானதாகவும் அவசர சேவைகள் தெரிவித்தன.

சம்பவ இடத்தில் 39 வயதுடைய யேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணை கைது செய்துள்ளதாக ஹாம்பர்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில்,தாக்குதல் நடத்திய பெண் தனியாக செயல்பட்டிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். பின்னணி குறித்த விசாரணைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினர் எக்ஸ் தளத்தில் இல் தெரிவித்தனர்.

ந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஃப்ளோரியன் அபென்செத் தெரிவித்தார்.

இந்த வாரம் ஜெர்மனியில் மூன்றாவது கத்தி தாக்குதல் என்பது நினைவூட்டத்தக்கது.