முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) மாலை மீட்கப்பட்டதாக  புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். 

சடலமாக மீட்கப்பட்டவர்  புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.

நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் குறித்த நபர்  புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மேலும் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.