Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை அதிகாரி சடலமாக மீட்பு
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரி ஒருவரின் சடலம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது
குறித்த அதிகாரி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.