Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சீன நாட்டு பேராசிரியர் ஹீ யான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சிறப்புரை இடம்பெற்றது.
“சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் முழுமையான வறுமை ஒழிப்பு: இலங்கைக்கான பாடங்கள்” எனும் தலைப்பில் குறித்த உரை நிகழ்த்தப்பட்டது.
சிறப்புரை அமர்வில் பங்கேற்றவர்கள் இறுதியில் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
சீனாவின் தலைநகரான பீஜீங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச பகுதி ஆய்வுகள் கற்கை நிறுவனத்தின் உதவி பேராசிரியராக ஹீ யான் செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது