மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் காவற்துறையினரால்   செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, உஹன காவல்  நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஒருவரின் இரண்டு குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் காவற்துறையினர் அழைத்துச் சென்றதாக கூறப்படும் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் காவல்  நிலைய வளாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்தக் கைது நடந்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love

  அம்பிட்டிய சுமனரத்ன தேரர்இலங்கைகைதுசுமனரத்ன தேரர்மட்டக்களப்புஸ்ரீ மங்களாராம விகாரை