‘விண்வெளியில் இருந்து ஏவுகணையே வந்தாலும் தடுக்கும்’ – கோல்டன் டோம் குறித்து டிரம்ப் நம்பிக்கை காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் அறிவிப்பு’விண்வெளியில் இருந்து ஏவுகணையே வந்தாலும் தடுக்கும்’ – கோல்டன் டோம் குறித்து டிரம்ப் நம்பிக்கை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்காவை தற்காத்துக்கொள்வதற்கான அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்பான “கோல்டன் டோம்” (Golden dome) திட்டத்துக்கான வடிவத்தை தேர்வு செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நிலம், கடல் மட்டுமல்லாமல், விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவுக்கு ஏற்படக்கூடிய தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்கள் இந்த அமைப்பில் பயன்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த திட்டம் 2029 ஆம் ஆண்டுக்குள், அவரது பதவிக்காலம் முடிவடைவதற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் இந்த திட்டத்துக்கு மொத்தமாக 175 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு