Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வடக்கில் உள்ள காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாதென அமைச்சரான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணிகளை சுவீகரித்து அவற்றை வேறு நபர்களுக்கு வழங்க வேண்டிய தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரையோர பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடன் மீளப்பெற வேண்டும் என தமிழ் தரப்புக்கள் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில் மக்களுக்குரிய காணிகளை சுவீகரிப்பதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. வடக்கில் எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். வடக்கு மக்களும் எமது பக்கம் உள்ளனர்.
எனவே, அங்குள்ள மக்களின் காணியை பறித்து வேறு நபர்களுக்கு வழங்கவேண்டிய தேவைப்பாடு எமக்கு கிடையாது. வேறு நபர்களை குடியேற்ற வேண்டிய தேவைப்பாடும் எமக்கு கிடையாது.
ராஜபக்சக்கள், ரணில்களை பார்த்ததுபோல எம்மையும் சந்தேக பார்வையுடன் பார்க்க வேண்டாம். தேர்தல் காலங்களில் வேண்டுமானால் அரசியல் நடத்துங்கள்.ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் அத்தகைய போக்குதேவையில்லையெனவும் அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.