கழிவு நீரில் தங்கம்: கோவையில் இப்படி ஒரு தொழில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?காணொளிக் குறிப்பு, கழிவு நீரில் தங்கம்- கோவையில் இப்படி ஒரு தொழில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?கழிவு நீரில் தங்கம்: கோவையில் இப்படி ஒரு தொழில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

55 நிமிடங்களுக்கு முன்னர்

தொழில் நகரமான கோவையில், எண்ணற்ற தொழில்கள் இருந்தாலும், பாரம்பரிய தங்க நகை தயாரிப்பு தொழிலுக்கென ஒரு தனி அடையாளம் உள்ளது. கோவை டவுன்ஹால், செட்டி வீதி, காந்தி பார்க் உள்ளிட்ட பகுதிகளில், பல ஆயிரக்கணக்கான நகைப்பட்டறைகள் இயங்கி வருகின்றன.

தங்க நகை பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், உக்கடத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ராஜவாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீரில் கலந்திருக்கும் மிக சொற்பமான சேதார தங்கம்தான் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 20 குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.

கழிவுநீரில் தங்கத்தை எப்படி பிரித்தெடுப்பது என்பது குறித்து இந்தக் காணொளியில் விளக்குகிறார் அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் லலிதா.

தற்போது தங்கத்தை ஆபரணமாக மாற்றும்போது தங்கம் கழிவுநீருடன் கலந்து வெளியேறும் நிலை, வெகுவதாக குறைந்துவிட்டதாக கூறுகிறார் கோவை மாவட்ட தங்க நகைபட்டறை தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான கமலஹாசன்

இவ்வளவு பெரிய மாநகரில் இதுபோன்ற தொழிலை செய்யும் தொழிலாளர்களும் இருக்கின்றனர் என்பது பலரும் அறியாதது. இந்த தொழிலை செய்யும் கடைசி தலைமுறையினரும் இவர்கள் தான்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு