மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிழக்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்தது. 

வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் அகவணக்கமும் செய்யப்பட்டது.

இதன்போது இறுதி காலப்பகுதியில் பரிமாறப்பட்ட கஞ்சியும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.