Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று
லண்டனில் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் திரண்டனர். கொட்டொலிகளுடன் ஆரம்பமான நீதிக்கான போராட்டம், பேரணியாக வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பிரதமர் இல்லம் வரை முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில், பிரித்தானிய தேசியக்கொடியை டொமிபில்லா ராஜநாயகம் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக்கொடியை யாதவி தயாளபவன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
மேனகா சுரெஷ் நினைவு சுடரினை ஏற்றிவைத்தார். இதையடுத்து நினைவு தூபிக்கு யதுசன் ஜெயக்குமார் அவர்கள் மலர் மாலை அணிவித்தார்கள். தொடர்ந்து நினைவு தூபிக்கு மலர் வணக்கமும் தீபவணக்கமும் இடம்பெற்றன.
நிகழ்வில் கவிதைகள், உரைகளும், முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் பகிர்வுகளும் இடம்பெற்றன. நம்பிக்கையின் வடிவமாக இருக்க கூடிய “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்”என்ற பாடல் ஒலிக்கப்பட்டதிற்க்கு பின்னர் , தமிழீழ தேசியக் கொடியும் பிரித்தானிய தேசியக் கொடியும் கையேந்தப்பட்டது.
ஈழம் கிடைக்கும் வரை பயணிப்போம்” என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவுபெற்றது. இறுதியாக, கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.