வடக்குக் கிழக்கிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி பிரபலங்கள் தான் பின்னடைவைக் கொண்டு வந்திருந்ததாக கட்சி தலைமை கொழும்பில் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஆகியோரது செயற்பாடுகளை கட்சி தலைமை கண்டித்துள்ளது.
அதிலும் சந்திரசேகரின் சொற்களும் உடல்மொழியும் நையாண்டித்தனமான பரிகசிப்பும் ஆதரவாளர்களைக் கூட தலைகுனிய வைத்துள்ளதாக புகார் இடப்பட்டுள்ளது.
இவ்வளவுக்கும் சந்திரசேகர் கட்சியில்; 30 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்டவர். ஒரு தடவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இப்பொழுது அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர். இப்படியெல்லாம் இருந்தும் எதைப்பேசுவது? எப்படிப் பேசுவது? அரசியல் விடயங்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாத நிலையிலேயே சந்திரசேகருடைய நடவடிக்கைகளும் வார்த்தைகளும் உள்ளதாக உள்ளுர் அவதானியொருவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் அரை அவியல் இளங்குமரனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அரசியல் விடயங்களைப் பற்றிய பேச்சுகளில் மிகப் பலவீனமாக உள்ளார்.ஏழாலையில் யாழ்ப்பாணமென்கிறார்.அரசின் வர்த்தமானியை நம்பவில்லையென்கிறார்.
இன்னொருபுறம் ரஜீவனோ பெண்களை தற்கொலை செய்ய சொல்லி ஆலோசனை சொல்லும் ரகத்திலுள்ளார்.
இத்தகைய அரைவேக்காடுகளே கட்சியின் பின்னடைவிற்கு காரணமென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.