3
வலி வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கக்கோரி பொதுமக்களால் வடக்கு ஆளுநரிடம் இன்றைய தினம் சனிக்கிழமை மகஜர் கையளிக்கப்பட்டது.
வலி.வடக்கு வள நிலையம் எனும் பொது அமைப்பினூடாக வலி. வடக்கின் மயிலிட்டி, பலாலி, தையிட்டி உள்ளடங்கலான பகுதிகளில் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.
நீண்ட காலமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் செய்வதற்கும் தமது இருப்பிற்குமான சொந்த நிலங்கள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என ஆளுநரிடம் தாம் கூறியதாகவும், அதற்கு வடக்கு மாகாண ஆளுநர் தற்போதுள்ள ஜனாதிபதியின் காலத்தில் காணிகள் அனைத்தும் படிப்படியாக விடுவிக்கப்படும் என கூறியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்