நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் போதைப்பொருள் கடத்தி சென்ற இந்திய பிரஜையை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (16.05.25) கைது செய்துள்ளனர்.

கப்பலில் சென்றவர்களை காங்கேசன்துறை துறைமுக சுங்க பிரிவினர் சோதனையிட்ட போது, இந்திய பயணி ஒருவரின் உடைமையில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கிராம் குஷ் ரக போதை பொருளை சுங்க பிரிவினர் மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து குறித்த நபரை கைது செய்த சுங்க பிரிவினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக , மீட்கப்பட்ட போதை பொருளையும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் காங்கேசன்துறை காவற்துறையினரிடம் கையளித்துள்ளனர்.

காவற்துறையினர் கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்