ஆதீரா Friday, May 16, 2025 இலங்கை

சட்டவிரோதமாக இலங்கைக்கு 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

சந்தேகநபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதான சந்தேகநபர்கள் 26 மற்றும் 46 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் கண்டியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த பெறுமதி சுமார் 210 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts

இலங்கை

Post a Comment