Home யாழ்ப்பாணம் யாழில். 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி 32 வயதுடைய நபர் கைது

யாழில். 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி 32 வயதுடைய நபர் கைது

by ilankai

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமான நிலையில் , சிகிச்சைக்காக  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பில் வைத்தியர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. 

அதனை அடுத்து பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த நபர் சிறுமியை நீண்ட காலமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்னர். 

Related Articles