Home யாழ்ப்பாணம் யாழில். நான்கு சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டி

யாழில். நான்கு சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டி

by ilankai

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக தமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது-

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது கட்சியை சார்ந்தவர்கள் போட்டியிடுவார்கள். ஏனைய சபைகளில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற, தமிழ்த் தேசிய நிலைப்பாடுடன் உள்ள கட்சிக்கு ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் நாம் அவற்றை வழங்குவோம்.

ஆனாலும், உள்ளூராட்சிச் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக எம்முடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளாது தமிழரசுக் கட்சி ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டுள்ளது.  

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கோரியிருந்தபோதும், பங்காளிக் கட்சிகளுடன் பேசி முடிவை அறிப்போம் என்று கூறியிருந்தார்கள் ஆனால் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

Related Articles