4
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்றைய தினம் புதன்கிழமை நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உண்மைகளை உறுதிப்படுத்த, தொடர்புடைய மனுவை ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷலா ஹெராத் சமர்ப்பித்திருந்தார்.