சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து பதவி நீக்கம் தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தோடர்புடைய மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனு இன்று (14) நீதியரசர்கள் இருவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த, அதனை எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
2024 பொதுத் தேர்தலில் அரச மருத்துவ அதிகாரியாக அர்ச்சுனா பதவி விலகாமல் தேர்தலில் போட்டியிட்டதாகவும், அது அரசியலமைப்புச் சட்டத்தினை மீறுவதாகவும் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.