தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை கனடா அங்கீகரித்து திறப்பு விழா நடாத்தியதற்கு, உத்தியோகபூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்க, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்துள்ளார்.
இதனிடையே கனடாவின் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் திறப்பதில் கனடா அரசின் நடவடிக்கை குறித்து தனது ஆட்சேபனையைத் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்த அனுர அரசின் நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவேற்றுள்ளார்.
முன்னதாக அனுர அரசின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் “ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்” என்று கூறி அதற்கு அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் நினைவுச்சின்னத்தின் நிர்மாணத்தையும் விமர்சித்துள்ளார்.
அத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அதன் பல்வேறு சமூகங்களிடையே நீடித்த அமைதியை நோக்கிய முயற்சிகளை பாதிக்கும்; என்றும் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.