Home கிளிநொச்சி ஒருவாரத்தினுள் தகவல் வழங்க கோரிக்கை!

ஒருவாரத்தினுள் தகவல் வழங்க கோரிக்கை!

by ilankai

வடமாகாணத்தில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கரைச்சி ,பூநகரி மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபைகளே தனித்து பெரும்பான்மையுடன் தமிழரசுக்கட்சி ஆட்சியமைக்கும் சபைகளாக தெரிவாகியுள்ளன.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் முக்கிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெயர்களை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகள் மற்றும் குழுக்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதல்வர்,துணைமுதல்வர் மற்றும் தவிசாளர் துணை தவிசாளர் பெயர்களை அறிவிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டஉறுப்பினர்களின் பெயர்கள், சபைகளின்; தொடக்க அமர்வுகளை நடத்துவதற்கு முன்பு,அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை பெரும்பான்மையைக் கொண்டிருக்காத சபைகளில் முதல்வர் மற்றும் தவிசாளர்களை தேர்ந்தெடுப்பது ஜூன் 2 ஆம் திகதி நடைபெறும் முதல் கூட்டத்தின் போது வாக்களிப்பதன் மூலம் தீர்மானிக்கப்படும் . உள்ளூராட்சி மன்றங்கள், ஜூன் 2,ஆம் திகதி  அன்று  அதிகாரப்பூர்வ பதவிக் காலத்தை தொடங்க உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுதலைவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles