2
இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு ஆபத்து- நாமல் எச்சரிக்கை
கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து முறையாக எதிர்ப்புத் தெரிவிக்கவும், இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான மோதல் தொடர்பான துல்லியமான வரலாற்றுக் கதைகளை கனடா அறிய வேண்டும் என வலியுறுத்தினார்.