4
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவர், தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியை புதம்மினி துரஞ்சா (வயது 19) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக்அலங்கரிப்புக்களை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வௌியே சென்றிருந்த போதே, இவர் தீ விபத்துக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.