Home யாழ்ப்பாணம் தமிழ் கட்சிகளிற்கு பேதி: தேசிய மக்கள் சக்தியின் இளங்குமரன்!

தமிழ் கட்சிகளிற்கு பேதி: தேசிய மக்கள் சக்தியின் இளங்குமரன்!

by ilankai

தமிழ் கட்சிகள் அஞ்சும் அளவிற்கு கடந்த அரசாங்கங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்தடம் பதிக்கவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி ஒன்றே தமிழ் கட்சிகளுக்கு தோல்வி பயத்தைக் காட்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அவர்கள் மனதில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் என நினைக்கிறேன். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் முதற் தடவையாக நாம் போட்டியிட்டோம்.

முதல் தடவையிலேயே 20 சதவிகிதமான ஆசனங்களைக் கைப்பற்றி தமிழ் கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளோம். தமிழ் கட்சிகள் கடந்த காலத்தைப் போன்று தனி ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் போகக் காரணம் எமது வெற்றியே எனவும் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு முன்னாள் தலைவர் சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம் எனவும் அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை எனவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிவமோகன்  தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுள்ளது.  அதற்கு தமிழரசுக் கட்சியின் செயற்பாடே காரணம்

குடத்தனையில் சுமந்திரன் தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம். இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை.

அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம். இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது.அரசியலை நாகரிகமாக அவர் செய்யவில்லை. அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள் என சிவமோகன்  தெரிவித்துள்ளார்.

Related Articles