Home யாழ்ப்பாணம் சஜித் பணத்தில் தமிழரசின் சாராயம்?

சஜித் பணத்தில் தமிழரசின் சாராயம்?

by ilankai

வாக்குகளை பெறுவதற்காக இலங்கை தமிழரசுக்கட்சி நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் மதுபானம் மற்றும் பணத்தை இலஞ்சமாக வழங்கியதான குற்றச்சாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியை அண்டிப் பிழைத்த அட்டைகள் சில இப்போது கஜேந்திரகுமாரின் முதுகில் ஏறியிருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதைய தேவைகளை உணர்ந்து அவர் பயணிக்கத் தொடங்க, அவரோடு ஒட்டிக் கொண்ட அந்த அட்டைகள் அவரை இழுத்து நடுத்தெருவில் விடும் வேலைகளை செய்யத் தொடங்கியிருக்கின்றன என எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு சட்டத்தரணியொருவர் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வெற்றி தொடர்பில் ஏற்பட்டுள்ள எரிச்சல், தமிழ் மக்களையே சாராயத்துக்கு விலை போனவர்கள் என்று கூறும் அளவுக்கு, அதுவும் ஜே.வி.பி.காரர்களோடு இணைந்து கூறுமளவுக்கு வந்திருக்கிறது எனவும் சட்டத்தரணி குற்றச்சாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக இலங்கை தமிழரசுக்கட்சி மதுபானம் மற்றும் பணத்தை இலஞ்சமாக வழங்கிதாக அண்மையில் தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.

இந்நிலையில் முன்னாள் தமிழரசு சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன் ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிறேமதாசா வழங்கிய லஞ்ச பணமே அதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

Related Articles