3
மொரகஹஹேன – மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பு செய்வதற்காக மின்குமிழுக்கு மின்சாரம் பெற முயன்றபோது, குறித்த சிறுமியின் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அயலவர்களால் சிறுமி மீட்கப்பட்டு பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் மில்லேவ, தம்மானந்த மாவத்தையில் வசித்து வந்த ஒன்பது வயது சிறுமி ஆவார்.
சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.