Home யாழ்ப்பாணம் முதல்மாவீரர் சங்கரின் தந்தை பிரிந்தார்!

முதல்மாவீரர் சங்கரின் தந்தை பிரிந்தார்!

by ilankai

ஈழப்போராட்டத்தில் வீரமரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரரான சங்கரின் தந்தையார் இயற்கை எய்தியுள்ளார்.

வடமராட்சி கம்பர்மலையைச் சேர்ந்த புகழ்பூத்த கல்வியாளர் , ஓய்வு பெற்ற ஆசிரியருமான செல்வச்சந்நிரன் அவர்கள் இன்று இறைபதமடைந்துள்ளார்.

விடுதலைப்போராட்டத்தின் முதல் மாவீரர் செல்வச்சந்திரன் சத்தியநாதன் இயக்கப்பெயர்: சங்கர் ஜுன் 19, 1960ம் ஆண்டில் பிறந்திருந்தார்.1982ம் ஆண்டின் நவம்பர் 27, வீரச்சாவடைந்த சங்கரின் தந்தையார் செல்வச்சந்;திரன் அவர்களே இயற்கை எய்தியுள்ளார்.

ஈழப்போராட்டத்தில் முதல் வீரமரணமடைந்த சஙகர் அவர்கள் வீரமரணமடைந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் வீரமரணமடைந்த அனைத்து போராளிகளும் தமிழ் மக்களால்; நினைவு கூரப்படுகின்றார்கள்.

Related Articles