இலங்கை முழுவதும் வெசாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களால் தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரை முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கஞ்சி வார்ப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை, சட்டவிரோத மக்களது காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமும் இடம்பெற்று வருகின்றது.
விகாரை அமைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி தொடர்ந்து வரும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே வெசாக் தினத்தை முன்னிட்டு வுவனியாவில் நல்லிணக்தை வலியுறுத்தி இன்று சிங்கள பயணிகளிற்கு அன்னதானம்(பன்சல) வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஏ9 வீதியில் மூன்றுமுறிப்பு பிள்ளையார் ஆலயம் அருகாமையில் வைத்து இந்து மதகுருமார்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், தமிழ் சிவில் அமைப்புக்கள் இணைந்து அதனை வழங்கியிருந்தனர்.