Home இலங்கை பள்ளத்தில் வீழ்ந்த இ.போ.ச. பஸ்; 11 பேர் உயிரிழப்பு ; 30க்கும் அதிகமானோர் காயம்

பள்ளத்தில் வீழ்ந்த இ.போ.ச. பஸ்; 11 பேர் உயிரிழப்பு ; 30க்கும் அதிகமானோர் காயம்

by ilankai

ஆதீரா Sunday, May 11, 2025 இலங்கை

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்தே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில், கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts

இலங்கை

Post a Comment

Related Articles