Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த கடினமான காலங்களில் இந்தியாவுடன் நிற்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், எனவே ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது.
இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்படும் ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகல் எப்போது நடைபெறும்? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையில், தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்தி, மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரில், கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (08) இரவு ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவிருந்தது.
ஆனால், பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இந்திய ட்ரோன் தாக்குதல்கள் மூலம் அழிவுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் போட்டியை திடீரென ரத்து செய்ய தொடர் நிர்வாகிகள் தீர்மானித்திருந்தனர்.