Home இலங்கை தேர்தல் செலவீன அறிக்கையை 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவும்

தேர்தல் செலவீன அறிக்கையை 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவும்

by ilankai

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் எண் தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்பாளர்கள், தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்த தனித்தனி அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

அதன்படி, போட்டியிட்ட மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அதிகாரியிடம் இந்த வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். 

இதற்கிடையில், வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles