Home யாழ்ப்பாணம் சங்கின் ஆதரவை பெற முஸ்தீபு

சங்கின் ஆதரவை பெற முஸ்தீபு

by ilankai

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை அக் கட்சியுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. 

பல சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெரும் கட்சிகளே ஆட்சி அமைக்க கூடிய சூழ் நிலை காணப்படுவதனால் , அக் கட்சியின் ஆதரவு பெறுவதற்காக தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை கடந்த இரு தினங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தர்த்தனிடம் கேட்ட போது, 

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தமக்கு ஆதரவு தருமாறு பல்வேறு தரப்பினரும் எம்முடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர். 

எமது கூட்டணியில் உள்ள ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோம் என தெரிவித்தார். 

Related Articles