1
மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளான பெல் 212 உலங்கு வானூர்தியில் பயணித்த 12 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயிர்ந்துள்ளது.
உயிரிழந்த அனைவரும் சிறீலங்காப் படையினர் என்பதை இலங்கை விமானப்படை (SLAF) உறுதிப்படுத்தியது. இதில் மூன்று சிறப்புப் படை (SF) வீரர்கள் மற்றும் இரண்டு இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தியின் துப்பாக்கிச் சூட்டாளர்களும் அடங்குவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பவத்தின் போது காயமடைந்த மீதமுள்ள ஆறு முப்படை வீரர்களும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை (09) காலை மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது.