2
அராலியில் உழவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு , வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரத்தை இயக்கிய நிலையில் , உழவு இயந்திரத்தின் கீழ் பகுதியில் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வேளை , உழவு இயந்திரம் திடீரென இயங்கியமையால் , அதனுள் விழுந்த போது உழவு இயந்திரம் அவர் மேல் ஏறியுள்ளது.
அதில் படுகாயமடைந்தவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.