Home யாழ்ப்பாணம் யாழில். தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்

யாழில். தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்

by ilankai

யாழ்ப்பாணத்தில் தேர்தல் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டதை அடுத்து இணுவில் பகுதியில் , வெற்றி பெற்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் அப்பகுதியில் வெடி கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன் போது, குறித்த தேர்தலில் தோல்வியுற்றவரும் , அவரது சகோதரனும் , கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தர்க்கப்பட்டு , தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , தேர்தலில் தோல்வியுற்றவரையும் அவரது சகோதரனையும் கைது செய்து நேற்றைய தினம் புதன்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

சகோதரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணியின் பிணை விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட மன்று , இருவரையும் பிணையில் செல்ல அனுமதித்தது. 

Related Articles