Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வர கூடியவர் விலை போகாதவராக தமிழ் தேசிய பற்றுடன் செயற்பட கூடியவராக இருக்க வேண்டுமாம் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் . மாநகர சபை முதல்வர் பதவி என்பது மிக முக்கியமானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட முக்கியமானது. நாடளுமன்ற உறுப்பினரை விட சிறப்பாக செயற்பட கூடியவராக இருக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜ தந்திரிகள் யாழ்ப்பாண முதல்வரை நிச்சயம் சந்திப்பார்கள். அவ்வாறானவர்களுடன் இராஜ தந்திர ரீதியாக உரையாட வேண்டும். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க கூடிய அபிவிருத்தி திட்டங்கள், தமிழ் மக்களின் அபிலாசைகள் , அவர்களின் பிரச்சனைகள் என்பவற்றை எடுத்து கூற வேண்டும்.
எனவே முதல்வராக தமது கட்சி சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவர் சிறப்பானவராக இருக்க வேண்டும் என கட்சிகள் பொறுப்புடன் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் முதல்வரை தெரிவு செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.