யார் முதல்வர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது.முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும், மாகாணசபை போன்று குழப்பமான சூழ்நிலைகள் உள்ளூராட்சிச் சபைகளில் தோன்றுவதைத் தவிர்க்க அது ஒன்றே வழி எனக் கருதுகிறேன்” என மூத்த போராளி பசீர் காக்கா தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ் மாநகர சபைக்கான முதல்வர் தெரிவு விவகாரத்தில் எம்.ஏ.சுமந்திரன் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் எனவும் மூத்த போராளி பசீர் காக்கா என்றழைக்கப்படும் மனோகர் தெரிவித்துள்ளார்.
யுhழ்.ஊடக அமையத்தில் இன்று கருத்து வெளியிட்ட அவர் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமை தொடர்பான விடயத்தில் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை கையாளவிடுவது எதிர்பார்க்கும் நோக்கங்களுக்கு மாறான விளைவையே தரும் என்பதனை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
குறிப்பாக யாழ்.மாநகரசபை முதல்வர் தெரிவில் முன்நிபந்தனை வைப்பது ஏற்புடையதல்ல.
சுமந்திரன் கட்சிக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ்த் தேசிய உணர்வாளர்களை நோகடிக்கும் விதத்திலேயே செயற்பட்டு வந்துள்ளார்.
2018 நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது தன்னிச்சையாக ஆர்னோல்ட்டை முதல்வராக எம்.ஏ.சுமந்திரன் நியமித்தார். கட்சியில் தலைவர், செயலாளர் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதே அவரது முடிவாக இருந்தது.
மாகாணசபையில் இறுதிப்போரில் நடைபெற்றது இனப்படுகொலையே என்றும் இதற்குச் சர்வதேச விசாரணையே வேண்டும் என்று முதலமைச்சர் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
இது தற்போது ஜே.வி.பி.யின் சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரனுக்குச் சினமூட்டியது, முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தார்.
சுமந்திரன் சார்பில் ஆர்னோல்ட் தான் மும்முரமாக இயங்கினார், தனது சார்பில் அப்போதைய முதலமைச்சரிற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்ததுக்குச் சன்மானமாகவே ஆர்னோல்ட் தான் முதல்வர் என்று முடிவெடுத்தார்.
எனவே, அத்தகைய அபாயத்தைத் தவிர்க்க எம்.ஏ.சுமந்திரனைத் தவிர்த்துக் கட்சித் தலைவரே நேரடியாகக் கையாள்வதே சிறந்ததெனவும் தெரிவித்துள்ளார்.