உள்ளூராட்சி அமைப்புகளில் 50விழுக்காட்டிற்கும்; மேற்பட்ட இடங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் நியமிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அறிவிக்கவும் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.
மொத்தம் 339 உள்ளூராட்சி அமைப்புகளுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளூராட்சித் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
“உள்ளூராட்சி மன்றங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்ற தொடர்புடைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு வரும் நாட்களில், தவிசாளர்கள், முதல்வர்கள், தலைவர்களை நியமிக்க அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னராக உள்ளூராட்சி பிரதிநிதிகளின் இறுதிப் பட்டியல் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்படும்.
வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்ளாட்சி அமைப்புகள் ஜூன் 2ஆம் திகதி முதல் கூட்டத்தை நடத்த உள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உள்ளாட்சித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி 150க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இருப்பினும், சுமார் 100 சபைகளில் மட்டுமே ஆட்சியமைக்கும் பெரும்பான்மையினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.