Home யாழ்ப்பாணம் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு-முன்னணி பேச்சு!

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு-முன்னணி பேச்சு!

by ilankai

தமிழர் தாயகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த அதன் தலைவர் சித்தார்த்தன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதன் பங்காளிக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருடன்;  உரையாடியுள்ளோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தால் இணைந்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோமெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சிங்கள பௌத்த இனவாத தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதனைத் தடுக்கும் வகையில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்.மாநகரசபையில் முதல்வர் ஆசனத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பகிர்ந்து கொள்ள  ;.ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்கள் ஒருபுறம் தொடர்வதாக தெரியவந்துள்ளது.

Related Articles