இந்திய ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் இருக்கா? பாக். அமைச்சரின் விநோத பதில்!Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 8 May 2025, 10:44 am
பாகிஸ்தான் ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ரஃபேல் உட்பட ஐந்து இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதற்கு சமூக ஊடக அறிக்கைகளே காரணம் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். (புகைப்படங்கள்- Samayam Tamil)
இந்திய ராணுவம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள் மீது இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 90 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளின் இறுதிச்சடங்கில் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற காட்சிகள் வெளியானது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் 5 ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் CNN தொலைக்காட்சிக்கு நேர்க்காணல் அளித்துள்ளார். அதில் இந்திய ராணுவ விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ரஃபேல் உட்பட ஐந்து இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதற்கு சமூக ஊடக அறிக்கைகளே காரணம் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் இந்திய ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக வெளியான தகவல்கள் எல்லாம், சமூக ஊடகங்களிலும், இந்திய சமூக ஊடகங்களிலும் தான், நமது சமூக ஊடகங்களில் அல்ல. ஜெட் விமானங்களின் சிதைவுகள் விழுந்தன. அது இந்திய ஊடகங்கள் முழுவதும் பரவியுள்ளது என பதில் அளித்துள்ளார் கவாஜா ஆசிப்.கவாஜா ஆசிப்பின் இந்த பதிலை கேட்ட நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். முன்னதாக இந்திய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் புகைப்படங்களை ஷேர் செய்திருந்தது. ஆனால் அந்த படங்களில் பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க