Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியா, பாகிஸ்தான் பதற்றம் பற்றி சர்வதேச ஊடகங்கள் சொல்வது என்ன?
பட மூலாதாரம், Getty Images
8 மே 2025
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதன்கிழமை அன்று, பாகிஸ்தான் மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்த பதற்ற நிலை உச்சத்தில் உள்ளது.
இரு நாடுகளிடமும் அமைதியைப் பேணுமாறு உலக நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியாவின் இந்தச் நடவடிக்கை குறித்து, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெவ்வேறு கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டன. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து உலகளாவிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உலகெங்கும் உள்ள பிரபல செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் குறித்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. இந்தக் கட்டுரைகள் போர் மற்றும் அதன் வருங்கால சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கின்றன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அமெரிக்க செய்தித்தாள்கள் எழுதியுள்ளது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறதுவாஷிங்டன் போஸ்ட்
“இந்தியாவின் தாக்குதலால், இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. 2021 முதல் அமலில் இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது” என்று அமெரிக்க செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ளது.
“தெற்காசிய துணைக்கண்டத்தில் காஷ்மீர் தொடர்பாக பல பத்தாண்டுகளாக நிலவும் மோதல் இன்னும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்” என்று அந்த செய்தித்தாள் எழுதியுள்ளது.
2019 இல் பாலகோட் தாக்குதலை விட இந்த முறை , மிகப் பெரிய தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ளது.
“புதன்கிழமை நடந்த வான்வழித் தாக்குதல், 2019 ஐ விட மிகப் பெரிய அளவிலான தாக்குதல். 2019 இல் நடந்த தாக்குதல், காஷ்மீரில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புகளுக்குப் பதில் நடவடிக்கையாக, இந்தியா பாகிஸ்தான் மீது மேற்கொண்டதாகும்” என்று அந்த செய்தித்தாள் எழுதியுள்ளது.
இந்திய போர் விமானங்களைத் தாக்கியது தொடர்பாக பாகிஸ்தான் கோருவது குறித்து, “பாகிஸ்தானின் கூற்றுக்களை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் இந்த விமானங்கள் அழிக்கப்பட்டதாக சொல்வது குறித்த கேள்விகளுக்கு இந்திய அரசாங்கம் பதிலளிக்கவில்லை” என்று அந்த செய்தித்தாள் எழுதியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ்
மற்றொரு அமெரிக்க செய்தித்தாளான, நியூயார்க் டைம்ஸ், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தவிர்க்கலாம் என்று நிபுணர்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது.
“பாகிஸ்தான் தனது அனைத்து வாய்ப்புகளையும் திறந்தே வைத்திருப்பதாகக் கூறுகிறது. ஆனால், ஒரு முழுமையான போரைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்” என்று அந்த செய்தித்தாள் எழுதியுள்ளது.
இந்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில்,”எனது சக ஊழியரும், எங்கள் தெற்காசிய பணியகத் தலைவருமான முஜிப் மஷால், இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தை விளக்கினார். இந்த இரண்டு நாடுகளின் வரலாறு முழுவதும் விரோதப் போக்குடனேயே இருந்து வருகிறது என்று முஜிப் கூறினார்,” என்று எம்மெட் லிண்ட்னர் எழுதியுள்ளார்.
“ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டால், நிலைமை இந்தியா vs பாகிஸ்தான், சீனா vs அமெரிக்கா என்று மாறிவிடும்,” என்று அவர் எழுதினார்.
ஃபிரெஞ்சு பத்திரிகைகள் என்ன எழுதின?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் இன்னும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான சூழ்நிலையில், புதன்கிழமை பல முரண்பாடான செய்திகள் ஒளிபரப்பப்பட்டதாகவும், அவற்றை சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை என்றும் ஃபிரெஞ்சு செய்தித்தாள் லா மொண்டே எழுதியுள்ளது.
மற்றொரு ஃபிரெஞ்சு ஊடகமான, ஃபிரான்ஸ் 24, ஒரு முழுமையான போர் இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இரு நாடுகளுமே அதைத் தவிர்க்க முயற்சிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியதாக மேற்கோள் காட்டியது.
“ஒரு முழுமையான போர் இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இரு தரப்பினரும் அதை எப்படியும் தவிர்க்க முயற்சிப்பார்கள்” என்று பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அமைதி ஆய்வுகள் மற்றும் சர்வதேச மேம்பாட்டுத் துறையின் உதவி பேராசிரியர் சுதிர் செல்வராஜ், ஃபிரான்ஸ் 24 நிகழ்ச்சியில் கூறினார்.
பிரிட்டன் செய்தித்தாள்கள் என்ன சொல்கின்றன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தி டெய்லி டெலிகிராஃப்பின் படி இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவேண்டும் என்கிறது.ஆசியாவில் நிலவும் நெருக்கடியில் மத்தியஸ்தம் செய்வது அமெரிக்காவின் பொறுப்பு என்று பிரிட்டன் நாளிதழான தி டெய்லி டெலிகிராஃப் எழுதியுள்ளது.
“காஷ்மீர் தொடர்பான சர்ச்சை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் இதற்கு முன் பல முறை அதிகரித்திருக்கின்றன. ஆனால் அமைதியை மீட்டெடுக்க அவர்கள் பெரும்பாலான சமயங்களில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை நாடியிருக்கின்றனர். ஆனால் இந்த நிலை மீண்டும் நிகழும் என்று நினைக்க முடியாது” என்று எழுதியுள்ளது தி டெய்லி டெலிகிராஃப் எழுதியுள்ளது.
“இரண்டு அணுஆயுத நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் அபாயம் இருக்கும்போது, தீர்வுக்கு மத்தியஸ்தம் செய்ய யார் வருவார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது இந்த நாளிதழ்.
“பதற்றத்தைக் குறைக்க அமெரிக்கா ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை வழிநடத்தும் என்று நாம் ஒரு காலத்தில் கருதியிருக்கலாம். 2002 இல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தபோது, மறைந்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கோலின் பவெல் , நமது (பிரிட்டன்) அப்போதைய வெளியுறவுச் செயலாளர் ஜாக் ஸ்ட்ராவை சேர்த்துக் கொண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டார்.”
மற்றொரு பிரிட்டன் செய்தித்தாளான தி கார்டியன், ‘உலகம் முழுவதும் போர் இயல்பாக்கப்பட்டுள்ளது’ என்று எழுதியுள்ளது.
“உலகம் முழுவதும் போர் என்பது சர்வசாதாரணமாகி, உலகின் ராஜ்ஜீய அமைப்புகள் பலவீனமடைந்துள்ள நேரத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை நடந்துள்ளது” என்று தி கார்டியன் தனது கட்டுரைகளில் ஒன்றில் எழுதியுள்ளது.
“இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட முந்தைய நடவடிக்கைகளை விட மிகவும் ஆக்ரோஷமானது. ‘போர் நடவடிக்கைக்கான பதிலடி கொடுப்பதற்கு பாகிஸ்தானுக்கான சாத்தியங்களை இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது” என்று இந்த செய்தித்தாள் எழுதியுள்ளது.
“இந்தியா தாக்கிய இலக்குகளில் மக்கள் தொகை அடர்த்தியாக இருக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியும் அடங்கும். 1971 போருக்குப் பிறகு இந்தியா இந்தப் பகுதியைத் தாக்கியதில்லை” என்று தி கார்டியன் எழுதியுள்ளது.
மத்திய கிழக்கு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியா – பாகிஸ்தான் பதற்றம்பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய தாக்குதல்களால் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுவதாக கல்ஃப் நியூஸ் எழுதியுள்ளது.
“விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறக்கூடும். இது இரு தரப்பு அரசியல் தலைமைகளுக்கும் தெரியும். 1998 இல் இரு நாடுகளும் அணு ஆயுதம் தயாரித்த பிறகு, கடந்த முப்பதாண்டுகளாக அவர்களுக்கு இடையே மீண்டும் மீண்டும் மோதல்கள் ஏற்பட்ட சமயங்களில் எல்லாம் அவர்கள் நிதானத்தைக் கடைபிடித்துள்ளனர்” என்று ஆஸ்திரேலிய உத்தி கொள்கை நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன் கூறியதாக, கல்ஃப் நியூஸ் மேற்கோள் காட்டியுள்ளது.
மற்றொரு நிபுணரான மனோஜ் ஜோஷியை மேற்கோள் காட்டி, எழுதியுள்ள இந்த செய்தித்தாள், “பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். இந்த நடவடிக்கை சிந்தனையுடன் எடுக்கப்படுமா என்பதுதான் கேள்வி? அவர்கள் ராணுவ முகாம்களைத் தாக்கினால், இந்தியா திரும்ப பதிலடி கொடுக்கும். ராணுவ நடவடிக்கைகள் தொடரும்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
கலீஜ் டைம்ஸ் இந்த செய்தியை பெரிதாக வெளியிட்டுள்ளது. செய்தித்தாளின் வலைத்தளம் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்த நேரடி வலைப்பதிவையும் நடத்தி வருகிறது.
“இந்த தெற்காசிய அண்டை நாடுகள், 1947 முதல் பல போர்களை நடத்தியுள்ளன. இப்போது நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. அவர்களின் நடவடிக்கை பதற்றத்தை அதிகரிப்பதற்காக அல்ல, அளவிட்டு நடத்தப்பட்டது என்று இந்திய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்,” என்று அந்த செய்தித்தாள் எழுதியுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு