Home கொழும்பு யாழ்.மாநகரசபை தக்க வைக்க பின்கதவு பேரம்?

யாழ்.மாநகரசபை தக்க வைக்க பின்கதவு பேரம்?

by ilankai

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் களத்தில் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அதேவேளை தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மீண்டும் மீள் எழுச்சியடைய தொடங்கியுள்ளன.

அவ்வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி  நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 63,327 வாக்குகளில் இருந்து 88,443 எனக் கூடிய முறையில் வாக்குகளை பெற்றுள்;ளது.

அதே வேளை தேசிய மக்கள் சக்தி  80,830 வாக்குகளில் இருந்து 56,615 ஆக வாக்குகளை இழந்துள்ளது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தனது ஆதரவை இரட்டிப்பாக அதிகரித்து 27,986 வாக்குகளில் இருந்து 51,046 ஆக உயர்ந்துள்ளது

தமிழ் மக்கள் கூட்டணியின் வாக்குகள் 27,986இலிருந்து 51,046 ஆக இரட்டிப்பு உயர்வு பெற்றுள்ளது.

இதனிடையே வடக்கில் உள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாததால், வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் வடக்கில் சபைகளை நிறுவ தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமது கட்சி வடக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும், சில கட்சிகள் வடக்கில் மாநகரசபைகளை அமைக்க தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன என்றும் அவர் ஒரு தெரிவித்துள்ளார்.அத்துடன் வடக்கில் தமது கட்சி 150 இடங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வவுனியா மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி தமிழரசு ஆதரவை வழங்க பதிலுக்கு யாழ்.மாநகரசபையில் தமிழரசு ஆட்சி அமைக்க தேசிய மக்கள் சக்தியின் உதவியை கோரி காய் நகர்த்தல்கள் தமிழரசு தலைமையால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

Related Articles